புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 டிச., 2019

6 வாள்வெட்டுக் குழுக்கள் - புத்தாண்டுக்குள் ஒழிக்க திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும், புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள்வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'யாழ்ப்பாணத்தில், இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனர். 6 வாள்வெட்டுக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் உள்ளவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தக் குழுக்களை புத்தாண்டுக்கு முன்னர் ஒழித்து விடுவோம். அதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும், மகேஷ் சேனாரட்ன கூறினார்.