புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 டிச., 2019

ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என சுமந்திரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில இணையத்தளமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் தெரிவித்ததாக வெளிவந்த செய்திகள் தவறானவை எனவும் அவ்வாறான கருத்து எதனையும் தான் தெரிவிக்கவில்லை எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவளித்த போதிலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.