வியாழன், டிசம்பர் 05, 2019

திங்கட்கிழமை வரை நீடிக்கும் போராட்டம்..!!???


இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த போராட்டம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RATP ஊழியர்கள் திங்கட்கிழமை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <<இன்று போல் (வியாழக்கிழமை ) வரும் திங்கட்கிழமை வரை கடுமையான போராட்டம் தொடரும்>> Unsa தொழிற்சங்கத்தின் தலைவர் Thierry Babec தெரிவித்துள்ளார்.
RATP சேவைகளின் பிரதான் ஊழியர்கள் Unsa தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய அறிவிப்போடு CGT தொழிற்சங்கமும் இணைந்துகொண்டால், திங்கட்கிழமை வரை பாரிய போக்குவரத்து தடை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.