புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 டிச., 2019

நாளையும் தொடரும் போக்குவரத்து தடை! - 90 வீதமான TGV இரத்து!!

நாளை வெள்ளிக்கிழமை 90 வீதமான TGV தொடருந்து சேவைகள் தடைப்பட உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமையைத் தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை டிசம்பர் 6 ஆம் திகதியும் வேலை நிறுத்தம்/ ஆர்ப்பாட்டங்கள் தொடர உள்ளன. ஓய்வூதியம் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள புதிய நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ள ஊழியர்கள், நாளை இரண்டாவது நாளாகவும் தங்கள் பகிஷ்கரிப்பை தொடர உள்ளனர். இதனால 90 வீதமான TGV சேவைகளை நிறுத்த உள்ளதாக SNCF அறிவித்துள்ளது.
பத்தில் ஒரு TGV மாத்திரமே நாளை இயங்கும். அதேவேளை TER சேவைகளிலும் 70 வீதமானவையை இரத்துச் செய்துள்ளதாகவும் SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டில் ஒரு Eurostar சேவைகள் மாத்திரமே செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.