புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 டிச., 2019

இரணைமடு அபாயத்தில்:இரவு விழிப்புடனிருக்க எச்சரிக்கை


கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் 21 பாதுகாப்பு அமைவிடங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 20,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 3147 குடும்பங்களை சேர்ந்த 10,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது