புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 டிச., 2019

கோத்தாவிற்கெதிராக கிளர்ந்தெழும் காவல்துறை!

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இலங்கை வரலாற்றில் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவியை ஒத்த பிரிகேடியர் பதவியை வகிக்கும் ஒருவரின் கீழ் இப்பதவியை வகிப்பது தொடர்பில் அவர்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர்.

அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, காவல்துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே, பிரிகேடியர் சுரேஸ் சாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் சுரேஸ் சாலி சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பணியாற்றியவர்.கோத்தபாயவின் விசுவாசியான முஸ்லீமான அவர் 2016இல் அவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனக்கு நம்பிக்கையான இராணுவ அதிகாரிகளை நியமித்து இராணுவ ஆட்சியை கொண்டுவர கோத்தா முற்பட்டுள்ள நிலையில் காவல்துறை அவருக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்துள்ளது