-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

23 ஜன., 2020

கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மட்டுமன்றி கூட்டமைப்பிலுள்ள அனைத்து தமிழ் எம்.பிக்களுக்கும் அரசாங்கம் முழுமையான பதுகாப்பை வழங்கி வருவதாகவும் எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அரசியல் ரீதியாக எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்றும் சபை முதல்வரும்
பாராளுமன்றத்தில் நேற்று இரா. சம்பந்தன் தமக்கு வழங்கப்பட்டுள்ள வீடு தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கூற்று ஒன்றை சபையில் தெரிவித்தார். அவரது கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் எந்த மாற்றத்தையும் எமது அரசு மேற்கொள்ளவில்லை. அதேபோன்று முன்னாள் அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளும் முறைப்படி வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க வசதிகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய கொள்கைளை கொண்டிருந்தாலும் அரசாங்கம் எந்த பாரபட்சமும் இன்றியே செயற்படுகிறது.

கடந்த ஆட்சியின் போதே இரா. சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் தாமதமாகி வழங்கப்பட்டது. அதற்கு நாம் பொறுப்பல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் அரசாங்கம் வசதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.விளம்பரம்