புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 பிப்., 2020

11 தமிழர்கள் கொலை வழக்கில் மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை
தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு ஏற்கனவே இரண்டு பிடிவிறாந்து விதிக்கப்படிருந்த நிலையில் இன்றைய தினமும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை . இந்நிலையில் மூன்றாவது தடவையாக இன்றும் பிடிவிறாந்து விடுக்கப்பட்டுள்ளது . நேற்றையதினம் இந்த நபர் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்விலும் பங்குபற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது . பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா ஆஜராகியிருந்தார்