புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 பிப்., 2020

மாநில செய்திகள்பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கவர்னர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும்)விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று நளினி ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் கருணை மனு மீது கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது

சென்னை ஐகோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனு வில் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.பேரறிவாளன் உள்பட 7 பேர் கருணை மனு மீது கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என கூறி உள்ளது.

இந்த வழக்கை ஐகோர்ட் பிப்ரவரி 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது