ஏ-9 வீதியில் 10 இற்கும் மேற்பட்ட இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மக்கள் இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர்.
கஞ்சா, குடி என்ற பெயரில் தமிழ் மக்கள் வீதிகளில் இறக்கப்பட்டு தொல்லைப்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது. அத்துடன் இந்த சோதனைச் சாவடிகளில் பெண் பொலிஸாரோ பெண் சிப்பாய்களோ இல்லை. இதனால் தமிழ் பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் யாழ். ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டுஇ தமிழ் மக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட வேண்டும்.
இதுதொடர்பான நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்க வேண்டும். இவ்வாறான சோதனைகள், இறக்கி ஏற்றல்கள் மூலம் உங்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்.