புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 பிப்., 2020

க.பொ.த உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!


கல்வியங்காடு,3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன்
(19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.
நேற்று மாலை மாணவன் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் (01) வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அறை ஒன்றில் தொலைபேசி வயர் மூலம் தூக்கில் தொங்கியுள்ளார்.
வெளியில் சென்ற அவரது தாயும்,சகோதரியும் வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் நேற்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.