புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 பிப்., 2020

கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?

அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கி பாராளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்கவேண்டுமென வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மக்களுக்கான சேவைகளை ஓர் ஆளுநராக பிரதிபலன் பராது வழங்கியதுபோன்று தொடர்ந்தும் சேவைகளை வழங்குவதற்கு , ஓர் வேட்பாளராக வரவேண்டும் என புலம்பெயர்தமிழர்கள் , வடக்கு மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக வடமாகாண முதலமைச்சர் கதிரையினை இலக்கு வைத்து இராகவன் செயற்படுவதாக தகவல்கள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.