புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 பிப்., 2020

அமெரிக்க, சுவிஸ் , பிரான்ஸ் ,ஜேர்மனி , ஸ்பெயின் ,இங்கிலாந்து ,கோலந்து , துருக்கி , பின்லாந்து ,  அவுஸ்திரேலியா , நியூசீலந்து , ஜப்பான் ,  கொரியா ,கட்டார் , ஐக்கிய அரபு ராச்சியம் (எமிரேட் ,எடியாட் )சீனாவுக்கான விமான சேவையை இரத்து செய்துள்ளநாடுகள்  


கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் பிரதான பகுதிளுக்கான விமானங்களை தற்காலிமாக இரத்து செய்துள்ள அல்லது குறைத்துள்ள விமான நிறுவனங்களின் விபரத்தை சி.என்.என். செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. 
 வட அமெரிக்கா
 1. அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் - மார்ச் 27 வரை இடைநிறுத்தம் 
 2. யுனிடெட் ஏயர்லைன்ஸ் - மார்ச் 28 வரை இடைநிறுத்தம் 
 3. டெல்டா ஏயர்லைன்ஸ் - ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம் 
 4. ஏயார் கனடா - பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம் 
 ஆசிய - ஓசியானியா  
 1. ஏயார் எசியா - பெப்ரவரி 29 வரை சில விமானங்கள் இடைநிறுத்தம் 
 2. ஆல் நிப்போன் ஏயார்வேஸ் - மார்ச் 29 வரை சில விமானங்கள் இடைநிறுத்தம் 
 3. கதே பசிபிக் மற்றும் கதே டிராகன் - 90 சதவீதம் விமானங்களை குறைத்துள்ளது 
 4. ஜப்பான் ஏயார்லைன்ஸ் - மார்ச் 28 வரை சில விமனங்கள் இடைநிறுத்தம் 
 5. கொரியன் ஏயார் - மார்ச் இறுதி வரை சில விமானங்களை இடைநிறுத்தம் 
 6. சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் மற்றும் சில்க் ஏயார் - மார்ச் 01 வரை சில விமானங்கள் இடைநிறுத்தம் 
 7. குவாண்டஸ் ஏயார்வே - மார்ச் 29 வரை இடைநிறுத்தம் 
 8. ஏயார் நியூஸிலாந்த் - மார்ச் 29 வரை இடைநிறுத்தம் 
 ஐரோப்பா - மத்திய கிழக்கு 
 1. ஏயார் பிரான்ஸ் - பெப்ரவரி 09 வரை இடைநிறுத்தம் 
 2. பிரிட்டிஸ் ஏயார்வே - பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம் 
 3. லுஃப்தான்சா, சுவிஸ் மற்றும் ஆஸ்திரியன் ஏயார்லைன்ஸ் - பெப்ரவரி 29 வரை பீஜிங், ஷங்காய்க்கான விமானங்கள் இடைநிறுத்தம், மார்ச் 28 வரை சீனாவின் ஏனைய பகுதிளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம்
 
 4. துருக்கிஸ் ஏயார்லைன்ஸ் - பெப்ரவரி இறுதி வரை இடைநிறுத்தம் 
 5.எடிஹட் ஏயர்வே - பெப்ரவரி 05 வரை இடைநிறுத்தம் 
  6. எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸ் - பெப்ரவரி 05 வரை இடைநிறுத்தம் 
 7. கட்டார் ஏயார்வேஸ் - அடுத்த அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம் 
 8. பின்னையர் ஏயார்லைன்ஸ் - பெப்ரவரி 29 வரை பீஜிங், ஷங்காய்க்கான விமானங்கள் இடைநிறுத்தம், மார்ச் 29 வரை   சீனாவின் ஏனைய பகுதிளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம்
  9. கே.எல்.எம். ஏயார்லைன்ஸ் - பெப்ரவரி 09 வரை பீஜிங், ஷங்காய்க்கான விமானங்கள் இடைநிறுத்தம், பெப்ரவரி 29 வரை சீனாவின் ஏனைய பகுதிளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம் 
 10. இபேரியா ஏயார்லைன்ஸ் - பெப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்