புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 பிப்., 2020

கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள்  ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன 
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புங்குடுதீவு- நயினாதீவு மூலக்கிளையினரின் சிபாரிசின் ஊடாக புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த வீதியானது ரூபாய் இருபது இலட்சம் செலவில் கடந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக தார் வீதியாக புனரமைக்கப்பட்டிருந்தது .
இப்படத்தில் காணப்படுகின்ற இல்லமே தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மனைவி ஏரம்பு மதிவதனி அவர்கள் பிறந்து வளர்ந்த இல்லமாகும் . அவ்வீட்டின் அருகிலேயே இவ்வீதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது . அந்த வீட்டின் அருகிலேயுள்ள காணியிலே விளம்பர பதாகை அமைக்கப்பட்டிருந்தது . இதேபோன்று புங்குடுதீவில் நான்கு வீதிகளில் காணப்பட்ட ஊரெழுச்சி திட்டம் தொடர்பான இரும்பிலான விளம்பர பதாகைகள் முழுமையாக பிடுங்குப்பட்டு அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினூடாக ( இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ) முன்னெடுக்கப்பட்ட #ஊரெழுச்சி ( கம்பெரலிய ) திட்டமூடாக கடந்த ஒன்றரை வருடகாலப்பகுதிக்குள் தீவகத்தில் ( ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி ) குன்றும் குழியுமாக காணப்பட்டிருந்த 75 வீதிகள் தார் வீதிகளாக புனரமைக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது