புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 பிப்., 2020

இனிமேல் தான் உணரப்போகிறீர்கள்! மாவை சேனாதிராஜா சூளுரை
தமிழரசுக்கட்சி எந்தக்காலத்திலுமே பதவிகள் பட்டங்களுக்காக விலைபோகவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நீர்வேலியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் கோப்பாய் தொகுதிமக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர்,

“தேர்தல்களின் போது மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை கூற உறுதியற்றவர்களுக்கு மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியானது மக்களுக்காகவே உருவாகி பல போராட்டங்களையும் அதற்காக சிறைச்சாலை சென்ற வரலாறுகள்தான் உள்ளது.

இன்று புதிதாக உதயமாகின்றவர்கள் அவர்களது வரலாறுகள் என்ன? அனுபவங்கள் என்ன? அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியவர்கள் இன்று இணைகின்றார்கள். தமிழரசுக்கட்சி எந்தக்காலத்திலுமே பதவிகள் பட்டங்களுக்காக விலைபோகவில்லை.

புதிதாக கட்சிகளையும் கூட்டணிகளையும் அமைப்பவர்கள் மக்களை சின்னாபின்னாமாக்கும் செயற்பாடுகளில் தான் அவர்கள் ஈடுபடுகின்றார்கள். இவர்களுக்கு இனிமேல்தான் ஒரு கட்சியை நடாத்துவது எப்படி எத்தகைய நெருக்கடிகள் இருக்கின்றன என்பதை விளங்கி அதன்மூலம் அனுபவங்களை பெற்றுக்கொள்வார்கள்.

நாங்கள் போராட்டங்களுக்குள் தான் உருவானோம். தலைமைத்துவத்துக்காகவோ அல்லது என்னை பிரேரிக்கவேண்டும் என்பதற்காகவோ வேறுகட்சிகளுக்கு போய்விடுவேன் என்று கூறவில்லை.

பதவிகள் எங்களைத் தேடிவருகின்றதாகவே இருக்கவேண்டும். மக்களின் உரிமைக்காக போராடிவருகின்ற நாங்கள் அதில் எத்தகைய பாதிப்புக்கள் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது, இவ்வாறானவை இடம்பெற்றபோது எங்களுக்கு உரிமைகள் சரியாகக் கிடைக்கவில்லை. இன்று சர்வதேச ரீதியில் எமது பிரச்சினை பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவை நடைமுறைப்படுத்தப்பட்டு, பல போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவேண்டும். கடந்த ஆட்சியில் பல சந்தர்ப்பங்கள் எமக்குக் கிடைத்துள்ளது. அரசியல் அமைப்பு ரீதியாக பல முன்னேற்றங்களுக்காக நாம் உழைத்துள்ளோம். அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளது. காணிவிடுவிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இவை முழுமையாக நிறைவுபெறாது விட்டாலும் ஓரளவேணும் நடைபெற்றுள்ளது. இவற்றை நாம் செய்கின்றபோது எமக்கு இலஞ்சம் வழங்கியுள்ளதாகக்க கூறியுள்ளார்கள். எவ்வாறு இலஞ்சம் பெற்றோம் என்பது பற்றி அதனைக் கூறியவர்களுக்குத்தான் தெரியும். ஜனாதிபதி தெரிவுக்குப் பின்னரான சூழலில் மக்களுக்கு மட்டுமன்றி எங்களுக்கும் பல சவால்கள் அச்சங்களே காணப்படுகின்றது.

எம்மால் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்கள் செய்து முடிப்பதற்கு பணம் இல்லை என்று இன்றுள்ளவர்கள் கூறிவருகின்றார்கள். இதுமட்டுமன்றி மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிபர்களை மாற்றுவதற்கு எத்தனிப்புக்கள் நடைபெற்றுவருகின்றது. இனிவரும் காலங்கள் தமிழ்மக்களுக்கு எத்தகைய துன்பங்கள் விளைவிக்கப்போகின்றார்கள் என்ற அச்சம் எங்களுக்குள்ளது. இவை எல்லாவற்றையும் சீர் செய்யும் வகையில் எமது நடவடிக்கைகள் அமையவேண்டும்.

இங்கு நடக்கும் விடயங்களை மக்களும் உணர்வார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் இன்று பிரிந்து கட்சிகளையும் கூட்டணிகளையும் அமைக்கின்றார்கள். இவர்கள் தேர்தலுக்காக ஒன்றுசேர்ந்துள்ளார்கள். இனிமேல்தான் கட்சி என்றால் என்ன? எத்தகைய நெருக்கடிகள் இருக்கப்போகின்றது என்பதை இவர்கள் உணர்வார்கள்.

இவர்கள் தமது வரலாறுகளை திரும்பிப் பார்க்கவேண்டும். எமது மக்கள் எவ்வாறு கூட்டமைப்பை ஆதரித்தார்களோ அந்த ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். இதில் நாங்கள் குழப்படடையத்தேவையி