போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது