புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2020

கம்பன் விழாவில் எஸ் பி பி க்கு விருது
பல்லாயிரம் பாடல்கள் பாடியமைக்காக எனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருக்கிறது என்பது எனக்கே தெரியாது என்று இலங்கை மண்ணில் வைத்து தெரிவித்திருக்கின்றார் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம்.

கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று செவ்வாய்;க்கிழமை இரவு கம்மன் விழா நடைபெற்றது.

இதற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மெட்டுப்போடு என்கிற பாடலையும் அவர் பாடி இரசிகர்களை அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு புகழ்மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கை கிரிக்கெட் அணிக்குள் இத்தனை திறமை இருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

அவர்கள் விளையாட்டிலும் சரி, இசையிலும் சரி அசத்தியிருப்பதாகவும் அவர் புகழாரம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad