புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 பிப்., 2020

கொரோனா வைரஸினால் இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

இத்தாலியில் கோரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்க்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் ரோமில் உள்ள தூதரகம் மற்றும் மிலனில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் தகவல்களின் படி, எந்த இலங்கையர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

1 இலட்சத்து 4,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இத்தாலிக்கு செல்லும் இலங்கையர்கள், குறிப்பாக வடக்கு இத்தாலியில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு வைரஸைத் தடுப்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்கும் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது