29 மார்., 2020

தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.

புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களும், அக்குரணை பகுதியிலுள்ள ஒரு கிராமமும் முற்றாக முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச மக்கள் எவரும் வெளிச்செல்ல அனுமதிக்கப்படாததுடன் கிராமங்களுக்கு செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் படைத்தரப்பு தெரிவித்தது