புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2020

சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.

இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. இலங்கையில் தற்போதுவரை 110 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு அப்குதியிலுள்ள பொது சுகாதார பரிசோதகரை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

ad

ad