புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 மார்., 2020

பாஸ்டருடன் பேசியதால் தொற்றியது கொரோனா

சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மேலும்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் 15ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை பாஸ்டரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.இதன்போது பாஸ்டரை அறை ஒன்றில் சந்தித்து அரை மணி நேரம் பேசியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழிபாட்டுக்கு சென்றோர் சுவாச பிரச்சினைகள் காணப்பட்டால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்படி பிரச்சினை இல்லாதோர் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் - என்றார்