புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 ஏப்., 2020

கொரோனா தொற்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் இந்தத் தகவலை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 73 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது