புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஏப்., 2020

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜேவிபியின் பிரசார செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹெரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றிரவு வெளியிட்டது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹெரத், ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் முடிவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் நிச்சயமாக நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தும் என்று தெரிவித்தார்