புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஏப்., 2020

இரவோடு இரவாக வடக்கிற்கு அனுப்பபட்ட 1100 பேர்

கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்ளடங்களாக சுமார் 1100 பேர் வடக்கிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு நேற்று(21) இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்த போது, “இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வடக்கின் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு நேற்றிரவு ஆயிரத்துக்கும் அதிகமானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கேட்ட போது, விபரங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திடமும் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிட்டார். ஆனால் திணைக்களத்திடம் அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவே பதில் வந்தது.

மேலும், இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்படுகின்ற தனிமைப்படுத்தல் விபரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது” என சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்