புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஏப்., 2020

தீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானியா பிரதமர் சீரான உடல் நிலையில் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் ஓரிரவிற்கு பின் சீரான உடல் நிலையுடன், நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மார்ச் 27 அன்று கொரோனா உறுதியான நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் அறிகுறிகளை தொடர்ந்து அனுபவித்து வந்த போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திங்களன்று ஜான்சனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது மற்றும் மத்திய லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


ஜான்சனின் உடல்நிலை குறித்த ஊகங்கள் தொடர்பில் உரையாற்றிய அவரது செய்தித் தொடர்பாளர், அவருக்கு நிமோனியா நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை

போரிஸ் ஜான்சன் நிலையான ஆக்ஸிஜன் சிகிச்சையைப் பெற்று வருகிறார், உதவி இல்லாமல் சுவாசிக்கிறார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஜான்சன் நேற்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.