புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2020

பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.

கொரோனாவிலிருந்து மீண்ட சிலர் ரத்த தானம் செய்யுமாறு என்.ஹெச்.எஸ் ரத்தம் மற்றும் மாற்று சிகிச்சை அமைப்பு (என்.ஹெச்.எஸ்.பி.டி) அழைப்பு விடுத்துள்ளது, இதனால் அவர்கள் சோதனைகளில் சிகிச்சையை மதிப்பிட முடியும்.

குணமடைந்தவர்கள் உருவாக்கிய ஆன்டிபாடிகள் மற்றவர்களில் வைரஸை அழிக்க உதவும் என நம்பப்படுகிறது.

1,500 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை உள்ளடக்கி இதைப் பற்றி ஆய்வு செய்ய ஏற்கனவே ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும்போது, அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கும், இது வைரஸைத் தாக்குகிறது.


காலப்போக்கில் இவை உருவாகி இரத்தத்தின் திரவ பகுதியான பிளாஸ்மாவில் காணப்படுகின்றன.

குணமடைந்தவர்களின் பிளாஸ்மா தற்போது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்க முடியுமா என்று சோதனை செய்ய கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளை என்.ஹெச்.எஸ்.பி.டி இப்போது அணுகி வருகிறது.

இதனை ஆரம்பத்தில் சோதனை முறையாக பயன்படுத்தி, பின்னர் முழுமையான ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் விரைவாக நோயாளிகள் குணமடைவார்கள் என நம்பப்படுகிறது.

ஒப்புதல்கள் செயல்முறையை விரைவாக நகர்த்துவதற்கு அரசாங்கத்துடனும் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் என்.ஹெச்.எஸ்.பி.டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ad

ad