புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்திற்கு கூடுதலாக பரிசோதனை கருவிகள் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 முறை மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.


தமிழகத்திற்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.510 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசோ, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், நிவாரணப் பணிகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடியும் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து கேட்டார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமாக பதில் அளித்தார்.

மேலும், தமிழகத்தில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதால், துரித பரிசோதனை கருவி(ரேபிட் டெஸ்ட் கிட்) தமிழகத்திற்கு அதிகமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பிரதமர் நரேந்திரமோடியும் தருவதாக உறுதியளித்து இருக்கிறார்.



தமிழகத்திற்கு 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மாநில அரசு வாங்கியுள்ளது. தற்போது, அந்த கருவிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டு பரிசோதனை பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கொண்டு தமிழகத்திற்கு 12 ஆயிரம் எண்ணிக்கையில் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வழங்குவதாக ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 50 ஆயிரம் எண்ணிக்கையில் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இதே கோரிக்கையைத்தான் நேற்று பிரதமர் நரேந்திரமோடியிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

ad

ad