புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2020

www.pungudutivuswiss.com
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு - விசேட சுற்றிவளைப்புகளுக்கு ஏற்பாடு
நாடு முழுவதும், இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும், இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்கள் நடமாட்டம், ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு, ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

11 ஆம் திகதிக்கு பின்னர் அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்து பயன்பாடும் அதிகரித்துள்ளதால், கடந்த 2 மாதங்களைவிட தற்போதே கூடுதல் அவதானம் தேவை.

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட இன்னும் சிறிது காலம் தேவை , மக்கள் இக்காலப்பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad