பிரான்சில் ஜுன் மாதத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பம் -
இந்த விமான சேவைகள், ஜுன் மாதத்தில் பிரான்சிற்குள்ளும், ஜுலை மாதத்தில் ஐரோப்பாவிற்குள்ளும் ஆரம்பிக்கப்படும் எனவும், மிகவும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் எனவும் IATA வின் தலைவர் Alexandre de Juniac தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நகரங்கள் நோக்கியும் மட்டுமே பறப்பில் ஈடுபட உள்ளன. கட்டாயமாக உடல் வெப்பநிலை அளவிடபட்டு, முகக்கவசங்கள் அணியபட்டே பயணிகள் விமானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் கட்டயாமாக்கப்பட்டுள்ளது.