புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூலை, 2020

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வேதநாயகம்

தபேந்திரன் தெரிவித்தார்.

கரணவாய், அண்ணாசிலையடியில் கரவெட்டி பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் க.இரத்தினம் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லாட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கியதே தவிர தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. இதை அறிந்தும் மாற்று அணியினர் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர். ஆனால, எமது மக்களுக்கு உண்மை நிலைவரம் தெரியும்.

புதிய அரசமைப்பு உருவாக்கம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தொழில் வழங்கல், பிரதேச அபிவிருத்திகள் எனத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முன்னேற்றகமாரான தீர்வுகளை நல்லாட்சி அரசைக்கொண்டு கூட்டமைப்பு வழங்கியிருந்தது.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டாலும் ஏனைய விடயங்களில் கூட்டமைப்பால் மக்கள் பல முன்னேற்றங்களைக் கண்டார்கள்.

புதிய நாடாளுமன்றத்தில் எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களில் அரசுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

எனவே, கூட்டமைப்பு பலமாக இருக்கவேண்டும். அந்தப் பலத்துக்குப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை தர வேண்டும். பல ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும்” – என்றார்.