புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூலை, 2020

அனலைதீவில் உள்ள குளங்கள் மற்றும் கேணிகளை புனரமைக்குமாறு கோரிக்கை

Jaffna Editor
அனலைதீவில் உள்ள குளங்களை புனரமைத்து தருமாறு அங்குள்ள பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தமிழர் தாயகத்திற்கு அழகு சேர்க்கும் தீவுகளில் அனலைதீவு முக்கியமானது. இந்த தீவு மிகச் சிறிய தீவாக இருக்கின்ற போதிலும் அங்கு வாழும் மக்கள் தமது நீர்த்தேவையை ஓரளவு பூர்த்தி செய்துகொள்கின்றனர் என்றால் அதற்கு அங்குள்ள குளங்களே காரணம். இங்கு சுமார் 30 இற்கு மேற்பட்ட குளங்கள் காணப்படுகின்றன. அதைவிட கேணிகளும் உள்ளன.

a

நெடுந்தீவில் சாறாபிட்டி, ஊர்க்காவல்துறையில் சாட்டி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நன்னீர் நிலைகளே தீவகத்தில் பிரபலமாக இருக்க, நன்னீர்க்கு தட்டுப்பாடு இல்லாத ஒரே தீவாய் அனலைதீவு விளங்கியது என்றால் அதற்கு இங்குள்ள நீரியல் கட்டுமானங்கள் மூலமான மழைநீர் சேமிப்பு திட்டங்களே காரணம்.

an

1719 இல் ஒல்லாந்தர் வரைந்த அனலையின் பூகோள வரைபடத்தில் 6 பெரிய குளங்கள் மற்றும் கேணிகளை மட்டுமே அடையாளப்படுத்தியுள்ளனர்.

பண்டைய மலபார் (தென்னிந்திய மற்றும் ஈழத்து மரபு) காலத்து வீட்டு கட்டமைப்பில் வீட்டு வளவுக்குள் ஒருகேணியில் மழை நீரை தேக்கி வைத்து கால்நடைகள் பயன்பெறவும், அக்கேணி மூலம் வடிக்கட்டிய சுத்தமான நீரை கிணறுகள் ஊடாகவும் பெற்றுவந்துள்ளனர்.

an

அந்நியர்களிடமிருந்து மறுமலர்ச்சி காணதொடங்கிய போது அனலையில் அநேக குளங்கள் வாய்க்கால்கள் மூலம் இணைக்கப்பட்டு விவசாயம் செழிப்புற்று விளங்கியது என்பார்கள். அப்போது காணபட்ட குளங்கள் மற்றும் கேணிகளை இப்போது தூர்வாரவேண்டும்.

இங்குள்ள குளங்கள் மற்றும் கேணிகள் தொடர்பான விபரங்கள்:-

1) பிள்ளையார் கேணி
2) நயினார்குளம்
3) ஐயனார் முன் கேணி
4) ஐயனார் வடக்கு கேணி (விநாயகமுடையார்ஃகலட்டு கேணி)
5) ஐயனார் தீர்த்தகரை கேணி
6) வேலன்குளம்
7) வண்ணக்குளம் (எ) வயலங்குளம்
8) தரவை கேணி
9) தரவை ஆவுரஞ்சி குளம்
10) தில்லன் குழி குளம்
11) புளியந்தீவு கேணி (நாகபுஷ்கரணி)
12) ஊடு முருகன் கேணி
14) கலட்டி முருகன் கேணி
15) வம்புலம் கேணி
16) தாமரை குளம்
17) பெருக்கடி கேணி
18) சுடலைக் கேணி
19) வடலிக் குளம்
20) வடக்கம்மன் கேணி
21) வீரபத்திரகோயிலடி கேணி
22) காளி கோயிலடி கேணி
23) பீயோனடி கேணி
24) தெற்கு குடியேற்ற திட்ட கேணி
25) தெற்கு தோட்ட கேணி
26) வடக்கு கடையடி கேணி
27)தென் மேற்கு கேணி (பசுபதியார்)
28) மேற்கு வயல் கேணி (சந்திரசேகரியார்)
29)கொம்சல்லியடி கேணி
30) தாமரை குளத்தடி கேணி

மேலும் தனியார் வளவுகளிலும் சில கேணிகள் உண்டு. மேற்படி கேணிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.