ஐ.டி. எச்.இல் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார். ஐ.டி. எச்.இல் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர் புற்று நோய், இருதய மற்றும் நீரிழவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குவைத் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய தலா 2 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.