புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2020

யாழ். அரச அதிபருக்கு அங்கஜனின் ஆணை

Jaffna Editorஎந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.


எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிரதேச செயலகங்களின் மூலமாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை தமக்கு வழங்குமாறும் அந்தக் கடிதத்தில், அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் அங்கீகாரமளிக்கப்பட்ட எல்லா திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களும், தமது இணை அனுசரணையுடன் தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திட்டங்களை, தமக்குத் தெரியாமல் அல்லது தமது ஒப்புதல் இல்லாமல், பிரதேச செயலர்கள் செயற்படுத்தக் கூடாது என்றும் அவர் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமது நேரடிப் பிரதிநிதியாக தனது தந்தை சதாசிவம் இராமநாதனை நியமித்துள்ளதாகவும், அவருக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் பொருத்தமான அலுவலகத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், அந்தக் கடிதத்தில் யாழ். மாவட்ட செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்

ad

ad