புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2020

ழித்துக்கொண்ட மாவை .தலைவர் என்ற அதிகாரத்தில் மதியக்குழுவைக்கூட்டுமாறு செயலாளருக்கு உத்தரவு

கட்சியில் இரு அணிகள் .பங்காளிக்கட்சிகளின் ஆலோசனை .கூட்ட்டமைப்புக்கு  தான் தலைவர் சம்பந்தன் அவர் கூட  மூன்று கட்சிகளின் ஆலோசனையை பெற்றே  வேண்டும் . மாவை தான் தமிழரசுக்கட்சி தலைவர்  ஸ்ரீதரனோ  சுமந்திரனோ அல்ல .கட்சித்தலைவரை  யாரும் எழுந்த மானத்துக்கு மாற்ற முடியாது.   இறந்தாலோ அல்லது ராஜினாமா  செய்தலோ மட்டுமே வேறு   தலைவரைதெரிவு செய்தல் வேண்டும் . இல்லையேல் நம்பிகையில்லா தீர்மானம்  கொண்டுவரப்படவேண்டும் அதுவும் பொதுச்சபை  கூடடபடவேண்டும்  வெடிக்கும்  பிரச்சினைகள் இவை தான் .தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலை தன்னிச்சையாக அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியமை கடும் குழு மோதல்களை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் மிக விரைவில் கூடவுள்ளது. கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாவை சேனாதிராசா,மத்தியகுழுவை கூட்டும் உத்தரவை பிறப்பபித்துள்ளார்;.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவியை மாவை சேனாதிராசாவிடமிருந்து பறித்து, சி.சிறிதரனிடம் வழங்கும் இரகசிய முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்;கப்பட்டுள்ளது.

தோல்வி அடைந்த மாவை சேனாதிராசாவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்க பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழரசுக்கட்சி யாழ்.கிளை என்பவை முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் சதி திட்டம் தீட்டப்பட்டு இரா.சம்பந்தன்,எம்.ஏ.சுமந்திரன் தரப்பு , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம், அம்பாறையின் த.கலையரசனிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் விரிசல் உச்சமடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாவை சேனாதிராசா,கோரியுள்ளார்.

ad

ad