இவர்களின் தலைமையிலேயே மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மாவட்ட அரச அதிகாரிகளால் முன்மொழியப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்த அபிவிருத்தி இணைப்பாளர்கள் அனுமதித்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.
இதில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராக அரசின் முகவரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மாவட்டத்திற்கு அரச ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அதே கட்சியைச் சேர்ந்த திலீபன் வவுனியா மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனங்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் விபரம்,
கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க
யாழ்ப்பாணம் - அங்கஜன் ராமநாதன்
கிளிநொச்சி - டக்ளஸ் தேவானந்தா
வவுனியா - கே.திலீபன்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு - கே.காதர் மஸ்தான்
அம்பாறை - வீரசிங்கம்
திருகோணமலை - கபில அத்துகோரல
காலி – சம்பத் அத்துகோரள
மாத்தறை – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி
குருநாகல் – குணபால ரத்னசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அநுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க