திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பங்கேற்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி ஆசா உள்ளிட்ட பலர் உறவுகளுக்காக தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
அமைதி வழி போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் சென்று மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.