புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2020

சிங்கள அரசிடம் ஓய்வூதியம் பெறுபவர் தான் விக்கி! - வீரவன்ச கிண்டல்

Jaffna Editor

இனவாதம் பேசியவாறு சீ.வி விக்கினேஷ்வரன் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச

இனவாதம் பேசியவாறு சீ.வி விக்கினேஷ்வரன் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச


இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், முஸ்லிம் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டதால் 05 இலட்சம் பேர் வேதனையில் இருப்பதாக ஒரு எம்.பி சபையில் கூறினார்.பாரிய நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கையில் எமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மூவின மாணவர்களும் பாடசாலை செல்கின்றனர். புதைப்பா? தகனமா? என்று பாராது மக்களுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுத்தது குறித்து பார்க்க வேண்டும்.கிராமங்கள் மூடப்பட்டு சிங்கள,தமிழ் ,முஸ்லிம்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து நோக்க வேண்டும்.

தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய முயல்கின்றனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை.சிங்கள மக்களின் மட்டுமன்றி சகல மக்களினதும் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவர் தெரிவானது மிக முக்கியமான விடயமாகும். சீ.வி விக்கினேஷ்வரன் போன்றவர்களின் நோக்கத்தை உணர வேண்டும். இனவாதம் பேசியவாறு அவர் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad