புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2020

விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா  வினாக்களா  ? எஸ். எஸ். தீவகன் 
வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ?
விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை  உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று  சென்றும் வருடங்களை இழுத்தடித்து  தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர்  பலவீனமான  நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  எளிதில்   ஏதும் கொடுக்கவா  போகிறார்கள்  அதுவும்  சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான்  பேரம் பேசி  இணங்க  வைக்க   கூடிய காலமாகும் அதனையே விட  ஸ்ரீலங்கா  வரலாற்றிலேயே  இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே  காலம்  அந்த காலத்தில் தான்  ஏதும் ஒரு  தீர்வு  கிடைக்குமானால்  கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும்   நம்பியே  கூட்டமைப்பு  இணைக்க நிலையை எடுத்தது .  சிலர் கூறுவது போல  கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா  செய்யலாமா  ?  செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது  கூட்டமைப்பு இல்லாவிடின்   பெரும்பான்மை  கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான்  உதாரணம்  வேலணை பிரதேச சபை  தவிசாளர்  டேகிர்வில்  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி  உறுப்பினை ர்   செந்தூரன் வேண்டுமென்றே   வாக்கெடுப்பு  முடிந்த பின்  வந்து  மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  உள்ள  உறுப்பினர் பலமும் போய்  நல்லாட்சியும் கவிழ்ந்து  1-2 வருடங்களின் முன்னேயே   குழப்பநிலை  வந்து  எமக்கு என்ன பலன் .
அதே  தீர்வு கோரிக்கையோடு  கம்பெரேலியா  பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி  என்பவதரியும் பயன்படுத்தி  போருக்கு பின்னர் அழிந்து  போயுள்ள எமது  நிலத்தை  ஓரளவாது  நிவர்த்தி செய்து மக்களை  மூச்சுவிட செய்ய முடிந்தது  அல்லவா  ஈபிடிபி  போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக   கிடைக்காத  அபிவிருத்தி  சிலவருடங்களில்  கிடைத்துள்ளதை  சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது  கூக்குரலிடும் மாற்று  அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும்  அங்கெ சென்று  எதனை  செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி   இந்த தடவை  வெற்றி பெற்று போனாலும்  அடுத்த மாதங்களிலேயே  அதுவும்  கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு  கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி  எடுப்பார்களா ?அல்லது  உடனேயே  ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி  சடடதுக்கு கீழே  தான் சாத்தியப்பிரமணமே  எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16  என்று  போனபோதே  அப்போதைய   அரசுகளே  கொடுக்காத  தேர்வினை  கோத்த  என்னும் கடும்புக்குவாதி  கொடுப்பாரென்று  நம்புவீர்களா  ?

ad

ad