உண்ணாவிரதமிருந்து 1987 செப்.26இல் உயிர்
நீத்த த.வி.புலிகளின் உறுப்பினர் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு விளக்கேற்றத் தயாரானதாகக் குற்றம் சாட்டியே இது குறித்த அறிக்கைகள் பொலிஸாரால் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டன.இந்த நினைவேந்தலுக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சாணக்கியன், மட்டு. மேயர் ரி. சரவணபவன், முன்னாள் பா.உறுப்பினர்களான எஸ்.சிறிநேசன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் துணைத் தலைவர் என்.சங்கரப்பிள்ளை உள்ளிட்ட அறுவரே நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.