புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 அக்., 2020

தமிழரசு கட்சி பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம்

Jaffna Editor
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டுவந்த கி.துரைராஜசிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது.
எனவே, கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச் செயலாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் தலைவர்களாக செயற்பட்டு வந்த ப.சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ப.சத்தியலிங்கம் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.