ரொறன்ரோவில் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும், லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளை, ரொறன்ரோ மத்திய தொகுதியில், லிபரல் கட்சி வேட்பாளர், 10 579 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பசுமைக் கட்சியின் தலைவர் அன்னமி போல் 8250 வாக்குகளைப் பெற்றார். 81 400 வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியிலும், 31 வீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன.