புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2020

யேர்மனியில் இரண்டாவது முடக்கம்

திங்கள் முதல் உணவகங்களும், பார்களும் மூடப்படும் என்றும் பெரிய நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்படும் முழு விபரம்!
யேர்மனியில் கடந்த வாரமாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றுக்கள் மீண்டும் ஏற்படுவதால் தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்காக ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஜெர்மனியின் மாநில பிரதமர்கள் புதன்கிழமை மீண்டும் நாட்டில் முடக்க நிலையை நவம்பர் 2 திங்கள் முதல் தொடங்குவதாக அறிவித்தனர்.
எதிர்வரும் கிறிஸ்மஸ், மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்கூட்டியே இதற்க்கான ஆயத்தங்களை மாநிலங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புதிய முடக்கக் நிலை கட்டுப்பாடுகளில் உணவகங்களும், பார்களும் மூடப்படும் என்றும் பெரிய நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்படும் தேவையற்ற பயணங்கள் தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது , சுற்றுலா நோக்கங்களுக்காக ஹோட்டல்களில் தங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அனைவரும் அவ்வாறு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர், மேலும் பொதுஇடங்களில் மொத்தம் 10 பேர் வரை மட்டுமே கூடமுடியும், மற்றும் இரண்டு வீடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களே ஒன்றுகூட முடியும்,
அத்தோடு திரையரங்குகள் , சினிமாக்கள் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் மூடப்படும் பொது பொழுதுபோக்கு மையங்களான நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கரிப்பு நிலையங்கள் அனைத்தும் மீண்டும், மூடப்படும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை,
எனினும் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளி, தேவலையங்கள் திறந்திருக்கும், 10 சதுர மீட்டருக்கு (108 சதுர அடி) ஒரு வாடிக்கையாளர் அனுமதிக்கப்படுவதால் கடைகள் திறந்திருக்கும் எனவும் தற்போது அறிவித்துள்ளனர் ,இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் , தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad