இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்பட பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் இருவரும் பேசினர்.
இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
“முக்கிய விடயங்கள் குறித்துப் பேசினோம். தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்களை நான் தெளிவுபடுத்தினேன். அரசியல் தீர்வு முயற்சிகள், புதிய அரசமைப்பு உருவாக்கம், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அடுத்து ஏற்பட்டுள்ள விடயங்கள், இரு நாட்டு உறவுகள், இந்தியப் பிரதமருடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை விடயம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசினோ