புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2020

யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி நெற்று மாலை அறிவுறுத்தியுள்ளார்.காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான நடவடிக்கையாக யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்று மறு அறிவித்தல் வரை இன்று பிற்பகல் முதல் மூடப்பட்டது. அதன் முன்பக்க வாயிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வெதுப்பகத்தை இயக்கி உற்பத்திப் பொருள்களை மாற்று வழியூடாக விநியோகிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நவம்பர் 21ம் திகதி வெதுப்பக விற்பனையகத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் தனிப்படுதலுக்கு உள்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள புத்தக நிலையமும் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று வீடுகளுக்கு அவர் சென்று வந்த நிலையில் அங்குள்ள குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 7 நாள்களின் பின் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேற்று அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

ad

ad