புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக பல நாட்கள் ஆகும்: வெளியான தகவல்

அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் இதுவரை முழுமையாக எண்ணப்படாததால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியிலும் நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே வாக்கு என்னும் பணிகள் நேற்று இரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அரிசோனா, நியூ மெக்சிகோ, கலிஃபோர்னியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் டென்ஸ்செஸ், தெற்கு கரோலினா, டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களை அதிபர் ட்ரம்பும் கைப்பற்றியுள்ளார். இதுவரை பைடன் 238 இடங்களிலும் அதிபர் ட்ரம்ப் 213 இடங்களும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வெற்றியை தீர்மாணிக்கும் 5 முக்கிய மாகாணங்களில் அதிபர் டர்ம்ப் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் அனைத்து மாகாணங்களிலும் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்படாததால் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நேரடியான வாக்குகள் எண்ணப்பட்டாலும் கூட கனிசமான தபால் வாக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அமெரிக்காவின் 9 மாகாணங்களில் மட்டுமே இன்று 95%க்கும் மேலான முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 22 மாகாணங்களில் தபால் வாக்குகள் நிலுவையில் உள்ளதால் இங்கு வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம் என கூறப்படுகிறது. இதேபோல் நியூயார்க் மற்றும் அலாஸ்காவில் இரவில் தபால் வாக்குகள் எண்ணப்படாது என்பதால் அதன் முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பில்லை. தற்போது வெற்றியை தீர்மானிக்கும் மாநிலங்களாக உள்ள மிசிகன் மற்றும் பென்சில்வேனியாவில் முடிவுகள் முழுமையாக வெளியாக பல நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bookmark and Share Seithy.com

ad

ad