புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2020

அமெரிக்க வாழ் தமிழர்களின் வாக்குகளை அள்ளிய ஜோ பைடன்: வெளியான முடிவுகள்

தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவின் New Jersey தொகுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press தெரிவித்துள்ளது.
தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவின் New Jersey தொகுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 119 வாக்குகளுடன் ஜோ பைடன் முன்னிலை வகித்து வரும் நிலையில் 93 வாக்குகளுடன் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகளவு வசிக்கும் New Jerseyல் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி மொத்தமாக ஜோ பைடன் கட்சி அங்கு 1,414,714 வாக்குகளை பெற்றுள்ளது.

டிரம்பின் கட்சி 881,071 வாக்குகளை பெற்றுள்ளது.

அங்கு வசிக்கும் தமிழர்களிடையே ஜோ பைடனுக்கு அமோக ஆதரவு இருப்பதை தொடக்கத்தில் இருந்தே காண முடிந்தது.

அங்கு வசிக்கும் குரு (12) என்ற தமிழ் சிறுவன் கூறுகையில், ஜோ பைடனின் கட்சிக்கு தான் என் தந்தை வாக்களிக்க வேண்டும், அவர்கள் தான் நாட்டை முன்னேற்ற முயல்வார்கள் என கூறினார்.

அவரின் சகோதரி ராதிகா கூறுகையில், பைடனுக்கு தான் என் குடும்பத்தார் வாக்களிக்க வேண்டும் எனெனில் துப்பாக்கி கலாச்சாரத்தை அவர் தான் ஒழிக்க வேண்டும் என நினைக்கிறார்.

சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ரகு கூறுகையில், ஜோ பைடன் வெற்றி பெறவே நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்

ad

ad