புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2020

வடக்கிற்கு அபாயமில்லை?

www.pungudutivuswiss.com
தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இது இன்றிரவு 12.20 அளவில் முல்லைத்தீவுக்கு அருகாக நகரும். இதன்போது புயலின் மையத்தின் வெளிப்பகுதி முல்லைத்தீவிலிருந்து சரியாக 129 கி.மீ. தொலைவிலும், புயலின் மையம் 171 கி.மீ. தொலைவிலும் காணப்படும்.நாளை( 25.11.2020) அதிகாலை 2.00 மணிக்கு புயலின் மையம் சாளையில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், நாளை அதிகாலை 4.00 மணியளவில் 138 கி.மீ. தொலைவிலும் காணப்படும். நாளை (25.11.2020) காலை 10.00 மணியளவில் புயலின் மையம் பருத்தித்துறையிலிருந்து 118 கி.மீ. தூரத்திலும், புயலின் மையத்தின் வெளிப்பகுதி 72 கி.மீ. தூரத்திலும் காணப்படும்.

நாளை முற்பகல் 11.00 மணியளவில் புயலின் மையத்தின் வெளிப்பகுதி பருத்தித்துறையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் காணப்படும்.

அதன் பின்னர் வடக்கு நோக்கி நகரும் நிவர் புயலானது நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுதினம் அதிகாலை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் கரையைக் கடப்பதற்கான வாய்ப்புண்டு. இந்தக் கணிப்பு புயலின் தற்போதைய நகர்வு வேகத்தின் அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது. புயலின் நகர்வு வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் மேலுள்ள கணிப்பிலும் மாற்றங்கள் நிகழலாம்.மழையைப் பொறுத்தவரை 26.11.2020 மாலை வரை இருக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து விடும்.

ad

ad