புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2020

பூநகரி பிரதேச சபையின் செயற்பாட்டிற்கு சபையின் செயலாளர் முட்டுக்கட்டை

Jaffna Editor
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு சபை செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டுகின்றனர். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதேச சபையை தமது ஆளுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்துள்ள நிலையில் சபையின் கடந்த கால செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என மக்கள் சாடுகின்றனர். குறித்த சாடுகையை ஊடகவியலாளர் வினாவாக எழுப்பியபோது அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். 2020ம் ஆண்டுக்கான பாதீட்டின் நிரந்தர வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் தற்புாது உள்ளதாகவும், அதற்கு பிரதேச சபைசெயலாளர் பின்னடிப்பதாகவும் இதன்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தம்மை நம்பி வாக்களித்த சபையை பொறுப்பு தந்த பிரதேச மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குறித்த விடயங்களை பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான பாதீடு அனைத்து சபை உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இன்று வரை அதனை நிறைவேற்றுவதற்கு சபை செயலாளர் இழுத்தடிப்பு செய்கின்றார். அவரது செயற்பாடுகளும் ஒத்துழைக்காமையுமே சபையின் செயற்பாடுகளிற்கு டையூறாக அமைந்துள்ளது.

சபை பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குறித்த செயலாளர் பொறுப்புக்களை ஏற்று 18 மாதங்கள் ஆகியுள்ளது. ஆரம்பத்தில் செயற்பாடுகள் பல விட்டுக்கொடுப்புக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்ட போதிலும் செயலாளரின் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் சபை செயற்பாடுகளிற்கு இடையூறாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

செயலாளரை மாற்றி தருமாறு பல்வேறு எழுத்துமூல குாரிக்கைகள் சம்மந்தப்பட்டவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், அவர் வேண்டுமென்று இழுத்தடிப்பதினாலேயே சபையின் செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியாது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செயலாளரை குற்றம் சாட்டும் பிரதேச சபை அவர் கடமைகளை பொறுப்பேற்கும் முன்னரும் திருப்திகரமாக செயற்படவில்லை எனவு்ம் வினைதிறனற்ற சபையாகவே உள்ளதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதில் அளித்த அவர், சபையின் செயற்பாடுகளின் ஊடாக மக்களிற்கு முழுமையான சேவையை பெற்றுக்கொடுக்க சபைக்கு வருமானம் போதிய அளவு காணப்படவில்லை எனவும், அதனால் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சபைக்கான வருமானத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க தவறியமைக்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் இதன்புாது வினவினார். வருமானத்தை அதிகரிக்காமல் இல்லை. நாம் அதிகரித்துள்ளோம். ஆயினும் அது போதுமானதாக இல்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

ad

ad