புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2020

பல்கலைக்கழக மாணவனுக்கு கொவிட்-19 தொற்று

www.pungudutivuswiss.com
வவுனியா குருமண்காட்டில் 22 வயது பல்கலைக்கழக மாணவனுக்கு நேற்று இரவு  கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவர்

திங்கட்கிழமை வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வருகை தந்து குருமண்காட்டிலிலுள்ள அவரது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

அதன் பின்னர் சனிக்கிழமை மாலை வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்குச் சென்றுள்ளார். வெளிநாடு செல்வதற்காக குறித்த மாணவனுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று (20.12.2020) இரவு 8.20 மணியளவில் வெளியானதில் அவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து மாணவன் வவுனியாவில் தங்கியிருந்த அவரின் நண்பர்களின் வீடு சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பல்லைக்கழக மாணவன் வவுனியாவில் நடமாடிய இடங்கள் தொடர்பிலான விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ad

ad