புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2020

பிரான்ஸ் செல்ல முயன்ற வவுனியா பெண்ணுக்கு நேர்ந்த கதி

www.pungudutivuswiss.com
போலி விசா மூலம் பிரான்சுக்கு செல்ல முயன்ற வவுனியாவைச் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டார் வழியாக பிரான்சுக்கு, போலி பிரான்ஸ் வதிவிட விசாவைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்றமைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ. ஆர் -669 என்ற தோஹா செல்லும் விமானத்தில் புறப்பட விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவர் டிக்கெட் கவுண்டருக்கு (கருமபீடம்) வந்தபோது, அவரது பிரான்ஸ் வதிவிட விசா மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து வைத்தனார்.

பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டூநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியல்கவு திணைக்களத்தின் கண்காணிப்பு பிரிவுக்கு அவரது ஆவணங்களை ஒப்படைத்தனர்.

அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது பிரான்ஸ் வதிவிட விசா போலியானது என நிரூபிக்கப்பட்டது.

அதன் பின்னர் அதிகாரிகள் குறித்த பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் அவர்களது கேள்விகளுக்கு முழுமையான பதில்களை அவர் வழங்கவில்லை.

அத்தோடு, மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

ad

ad